மெயிட்ஸியின் அன்பான வணக்கம் 🙏

இந்த பகுதியில் உங்கள் வேலை தொடர்பான அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.

வேலை தன்மை

கீழே கொடுக்கப்பட்டுள்ள வேலைகளுக்கு கல்வி தகுதி, வயது வரம்பு கிடையாது. அவரவர் அனுபவத்திற்கும், விருப்பத்திற்கும் ஏற்ப தகுந்த வீடுகளில் பாதுகாப்பான வேலை பெற்றுத் தரப்படும்

வீட்டு வேலை

வீடு பெருக்குதல், துடைத்தல், பாத்திரம் கழுவுதல், பாத்ரூம் கிளீன் செய்தல், கதவு ஜன்னல் துடைத்தல், தூசி தட்டுதல் உள்ளியவை

சமையல் வேலை

தென்னாட்டு சமையல் (சைவம் / அசைவம்) – காலை டிபன், மதிய சாப்பாடு, இரவு உணவு, டீ, காபி. கேஸ் அடுப்பு, கிரைண்டர், மிக்ஸி, ஃபிரிட்ஜ் உபயோகித்தல் உள்ளியவை

டயாபர் மாற்றுதல், குளிக்க வைத்தல், சிறுநீர், மலம் அகற்றுதல், சாப்பாடு ஊட்டுதல், எண்ணெய் தேய்த்தல், மசாஜ் செய்தல், தேவையான அளவு சமைத்தல் உள்ளியவை

குழந்தை பராமரிப்பு
முதியோர் பராமரிப்பு

தார்மீக ஆதரவு, வெளியே கூட்டி செல்லுதல், துணி மடித்தல், மேல் வேலை, தேவையான அளவு சமைத்தல், மாத்திரை மருந்து எடுத்துக் கொடுத்தல், கை பிடித்து உதவி உள்ளியவை

நோயாளி பராமரிப்பு

நல்ல வீட்டு அனுபவம் (அ) ஓட்டல் அனுபவம் – வடநாட்டு சமையல், பிராமண சமையல், மைக்ரோவேவ் அவனில் சமைத்தல், ஹீட்டர், டிஷ்வாஷர் உபயோகித்தல் உள்ளியவை

சிறப்பு சமையல் வேலை (நிபுணர்)

டயாபர் மாற்றுதல், குளிக்க வைத்தல், சிறுநீர், மலம் அகற்றுதல், மசாஜ் செய்தல், ஊசி போடுதல், ட்ரக்கியோஸ்டோமி, சர்க்கரை, ரத்த அழுத்தம் பரிசோதித்தல் உள்ளியவை

சம்பள விவரம்

Frequently asked questions

மெயிட்ஸி என்பது வேலை வாய்ப்பு ஏஜென்சியா?

மெயிட்ஸி என்பது வீட்டு வேலை தேடுபவர்களையும், வீட்டு வேலைக்கு ஆள் தேடுபவர்களையும் இணைக்கும் அங்கீகாரம் பெற்ற ஆன்லைன் தளம். சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் எங்கள் நிறுவனம் கோவை மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களிலும் சேவைகளை வழங்கி வருகிறது.

எனக்கு முன்பணம்(அட்வான்ஸ்) கிடைக்குமா?

தாங்கள் வேலை செய்வதற்கு முன்பே எக்காரணம் கொண்டும் முன்பணம் வழங்கப்பட மாட்டாது. வேலைக்கு சேர்ந்த பின்னரும் கூட மாதத்திற்கு நடுவே எந்த காரணம் கொண்டும் வாடிக்கையாளரிடம் முன்பணம் கேட்கக் கூடாது. மாதத்திற்கு நடுவே அட்வான்ஸ் வழங்கப்பட மாட்டாது.

ஏஜன்சிகளுக்கும் மெயிட்ஸி ஆன்லைன் தளத்திற்கும் என்ன வித்தியாசம்?

பொதுவான ஏஜென்சிகள் போல் அல்லாமல், மெயிட்ஸி ஆன்லைன் தளம் தொழில்நுட்பத்தை(டெக்னாலஜியை) பயன்படுத்தி வேலை தேடுவோரையும் வேலைக்கு ஆள் தேடுவோரையும் இணைக்கிறது. இதனால் வேலை தேடுவோர் அவர்கள் அருகிலோ அல்லது அவர்கள் எதிர்பார்க்கும் ஊரிலோ பாதுகாப்பான வீடுகளில் வேலை வாய்ப்பை பெற முடியும்.

மாதம் எத்தனை நாட்கள் எனக்கு விடுப்பு(லீவ்)?

மாதம் 2 நாட்கள் விடுப்பு உண்டு. ஒரு குறிப்பிட்ட மாதம் விடுப்பு எடுக்கவில்லை என்றால் அதன் 2 நாள் விடுப்பை அடுத்த மாதம் 2 நாள் விடுப்போடு சேர்த்து வைத்து 4 நாட்களாக எடுக்கலாம். (ஒரு மாதத்தில் அதிகபட்சம் 4 நாட்கள் மட்டுமே விடுப்பு எடுக்க முடியும்). ஒவ்வொரு முறை தாங்கள் விடுப்பு எடுக்கும் போதும், 2 வாரங்களுக்கு முன்னதாகவே மெயிட்ஸி நிறுவனத்திடமும், வீட்டு உரிமையாளரிடமும் தெரிவிக்க வேண்டும். அப்போது தான் உங்களுக்கு பதிலாக வேறொரு ஆளை நாங்கள் தற்காலிகமாக பணியமர்த்த முடியும்.

இதற்கு ஏதேனும் பணம் கட்ட வேண்டுமா?

மெயிட்ஸி எந்த காரணம் கொண்டும் வீட்டு வேலை தேடுவோர் / வீட்டு வேலைக்கு சேருவோரிடம் எவ்வித கட்டணமும் வாங்குவதில்லை. பணிப்பெண்கள், சமையலர், குழந்தை பராமரிப்பவர், முதியோர் பராமரிப்பவர் மற்றும் நோயாளி பராமரிப்பவர் / நர்ஸ் ஆகியோருக்கு மெயிட்ஸி ஒரு கட்டணமில்லாத வேலை வாய்ப்பு தளம்.

என் சம்பளம் எப்போது / எப்படி கிடைக்கும்?

தாங்கள் ஒரு குறிப்பிட்ட மாதம் வேலை செய்ததற்கான சம்பளத்தை அதற்கு அடுத்த மாதம் 1 முதல் 5ஆம் தேதிக்குள் தங்கள் வீட்டு உரிமையாளர்கள் தங்களிடமே நேரடியாக வழங்குவார்கள். (மெயிட்ஸி நிறுவனம் தங்களிடம் எந்த விதமான பணமோ, பொருளோ, கமிஷனோ வாங்குவதில்லை)

எனக்கு ஓய்வு வழங்கப்படும் நேரம் என்ன? தினமும் மொபைல் பயன்படுத்த அனுமதி உண்டா?

தங்களுக்கு தினமும் ஓய்வு நேரமும், மொபைல் பயன்படுத்தும் நேரமும் மெயிட்ஸி ஊழியரால் வாடிக்கையாளரிடம் நேரடியாக கேட்கப்பட்டு நிர்ணயம் செய்யப்படும். அவசர காலம் தவிர்த்து, தங்கள் மொபைல் பயன்படுத்தப்படும் நேரம் தவிர மற்ற நேரங்களில் மொபைல் பயன்படுத்த அனுமதி இல்லை.

வேலைக்கு செல்லும் வீட்டில் என்னென்ன வேலைகள் எல்லாம் எனக்கு கொடுக்கப்படும்?

தங்களுக்கு தினமும் ஓய்வு நேரமும், மொபைல் பயன்படுத்த நேரமும் மெயிட்ஸி ஊழியரால் வாடிக்கையாளரிடம் நேரடியாக கேட்கப்பட்டு நிர்ணயம் செய்யப்படும். அவசர காலம் தவிர்த்து, தங்கள் மொபைல் பயன்படுத்தப்படும் நேரம் தவிர மற்ற நேரங்களில் மொபைல் பயன்படுத்த அனுமதி இல்லை.

பகுதி நேர / முழு நேர வேலைகளுக்கு மெயிட்ஸியின் தொடர் வழிகாட்டல் / உதவி உண்டா?

பகுதி நேர / முழு நேர வேலைக்கு செல்வோர், தங்களை தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர்களிடம் தாங்களே விவரங்களை நேரடியாக பேசி தங்களுக்கு ஏற்ற வேலையில் சேர்ந்து கொள்ள வேண்டும். பகுதி நேர / முழு நேர வேலைகளுக்கு வாடிக்கையாளர்களிடம் மெயிட்ஸி நிறுவனம் எந்த கட்டணமும் வாங்குவதில்லை என்பதால், தாங்கள் சேரும் வேலைக்கோ, வேலையில் ஏற்படும் சிரமங்களுக்கோ மெயிட்ஸி நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பாகாது.

ஒரு முறை மெயிட்ஸி தளம் மூலம் நான் வேலைக்கு சேர்ந்து விட்டால், பின்னாளில் மெயிட்ஸி தளத்தை பயன்படுத்த முடியுமா?

தங்கள் பகுதிக்கு அருகில் இருக்கும் பகுதி நேர, முழு நேர மற்றும் தங்கி செய்யும் வேலை வாய்ப்புகளைப் பெற எப்போது வேண்டுமானாலும் மெயிட்ஸி தளத்தை தாங்கள் பயன்படுத்தலாம். ஒரு முறை மெயிட்ஸியில் தங்கள் சுயவிவரம் பதிவு செய்யப்பட்டு விட்டால், அது எப்போதுமே பாதுகாக்கப்பட்டு வாடிக்கையாளர்களிடம் இருந்து தங்களுக்கு வேலை குறித்த அழைப்புகள் வந்து கொண்டே இருக்கும்.

*குறிப்பு: மெயிட்ஸி என்பது வீட்டு வேலை தேடுவோரையும், வீட்டு வேலைக்கு ஆள் தேடுவோரையும் இணைக்கும் ஆன்லைன் தளமே அன்றி, எந்த சூழலிலும், யாருக்கும் மெயிட்ஸி நிறுவனம் 100% வேலை உறுதி வழங்க முடியாது.

மெயிட்ஸி நிறுவனம் மூலம் பகுதி நேர / முழு நேர வேலைகளுக்கு சேருவோர் தங்கள் பாதுகாப்பை தாங்களே உறுதி செய்து கொள்ள வேண்டும். ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் மெயிட்ஸி நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பாகாது.

வேலைக்காக யாரிடமாவது பணமோ, பொருளோ கொடுத்தால் அதற்கு மெயிட்ஸி நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பாகாது.

மெயிட்ஸி ஆன்லைன் நிறுவனத்தால் என் வாழ்க்கை இப்போ மாறிடுச்சு. பாதுகாப்பான வீட்ல நல்ல வேலை இருக்கிறதால என் குடும்பம் ஊர்ல நிம்மதியா இருக்காங்க.

நாடியம்மாள், தஞ்சை மாவட்டம்

★★★★★

உங்கள் விவரங்களை பதிவிடுங்கள்

சரியான விவரங்களை பதிவிட்டு உங்களுக்கு ஏற்ற வேலையை பெற்றுத்தர எங்களுக்கு உதவுங்கள்